இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பில் காணப்படும் நிர்வாக இடைவெளிகள் தொடர்பாக வெரிட்டே ரிசர்ச் நடத்திய ஆய்வின் முடிவுகளை இந்த விளக்கவுரை ஆவணப்படுத்துகிறது. தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு இவ் ஆய்வு நடாத்தப்பட்டது.
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத்திற்கு பொறுப்பான உச்ச அமைப்பான தேசிய அனர்த்த முகாமைத்துவ பேரவையின்(NCDM) செயல்பாடுகளை இந்த ஆய்வு குறிப்பாக ஆராய்ந்தது.
ஆய்வின் விளைவாக NCDM இன் இரு முக்கிய நிர்வாக தோல்விகள் அடையாளம் காணப்பட்டன: 1) தேவைக்கேற்ப முடிவுகளை எடுக்க பேரவை கூட்டப்படாமை; மற்றும் 2) பேரவை தனது முக்கியமான பொறுப்புகளை புறக்கணித்தமை.
இந்த வகையான நிர்வாக தோல்விகள் அனர்த்த முகாமைத்துவத்திற்கு மாத்திரம் தனித்துவமானவை அல்ல. மாறாக, தற்போதைய அரசதுறையில் பரவலாக காணப்படும் ஒரு பொதுவான குறைபாடாகும்.
Last modified: November 11, 2023