Written by 12:43 pm Background Note, Debt Update, Insights, Policy Briefs, Research Briefs, Research Reports Views: 0


இயற்கை அனர்த்தக் காப்பீடு

கடந்த காலங்களில் அதிகரித்த அளவிலான இயற்கை அனர்த்தங்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இலங்கையில் இயற்கை அனர்த்த காப்பீட்டுத் திட்டங்களின் பாவனை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றது. இவ்வகையான அனர்த்தங்களினால் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் (SME) அதிகளவில் பாதிக்ப்படுகின்றன. இலங்கையில் இயற்கை அனர்தக் காப்பீட்டுத் திட்டங்களின் மட்டுப்படுத்தப்பட்ட பாவனைக்கு பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும் தகவல்களை இலகுவாகப் பெறமுடியாமை குறிப்பாக சுதேச (சிங்கள மற்றும் தமிழ்) மொழிகளில் பெற முடியாமை ஒரு முக்கிய காரணம் என எமது கொள்கைக் குறிப்பு இணங்கண்டுள்ளது.

இயற்கை அனர்த்தம் சம்பந்தமான தனியார் துறையினால் வழங்கப்படும் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் அரச நலன்புரித்திட்டங்;கள் அனைத்தும் அது தொடர்பான தகவல்களை ஆங்கிலத்தில் மாத்திரமே வழங்குகின்றன என்பதை எமது கண்டறிதல்கள் வெளிப்படுத்தியுள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்ப்படுகின்ற கொழும்பிற்கு வெளியே உள்ள பிரதேசங்களில் ஆங்கில எழுத்தறிவு வீதம் 30% இற்கும் குறைவாக காணப்படும் சந்தர்ப்பத்தில் இத்தகவல்களை சுதேச  மொழிகளில் வெளியிடுவதனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களிற்கு இயற்கை அனர்த்த காப்பீட்டுகளின் பிரதிபலன்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்களை கணிசமான அளவு அதிகரிக்க முடியும்.

Visited 1 times, 1 visit(s) today

Last modified: November 11, 2023

Close