Written by 12:32 pm Verité in the News Views: 1

வருவாயை அதிகரிக்கவும் வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் வரவு – செலவுத் திட்டத்திற்கான 10 முன்மொழிவுகளை வெளியிடும் வெரிட்டே ரிசர்ச் 

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (நவம்பர் 13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, வெரிட்டே ரிசர்ச் இலங்கையின் வருவாயை அதிகரிப்பதற்கும் வளர்ச்சிக்கு புத்துயிர்  அளிப்பதையும் நோக்கமாகக் வடிவமைக்கப்பட்ட 10 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை வெளியிட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பாதை குறித்த கலந்துரையாடலை எளிதாக்கும் வகையில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற ‘வருவாய் மற்றும் வளர்ச்சிக்கான வரவு செலவுத் திட்டம்’ என்ற கருத்தரங்கில் இந்த முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் அபிவிருத்தி கற்கைகள் நிறுவகத்தின் பேராசிரியர் மிக் மூரே, ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்தா தேவராஜன், ஓபர்லின் கல்லூரியின் பேராசிரியர் உதார பீரிஸ் மற்றும் வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி நிஷான் டி மெல், ஆராய்ச்சி பணிப்பாளர் சுபாஷினி அபேசிங்க, முன்னணி பொருளாதார நிபுணர் ராஜ்பிரபு ராஜகுலேந்திரன், முன்னணி பொருளாதார நிபுணர் மதீஷ அரங்கல மற்றும் முன்னணி தரவு பகுப்பாய்வாளர் அஸ்வின் பெரேரா ஆகியோரின் முன்வைத்தல்கள் இடம்பெற்றன.

நிஷான் டி இ மெல் தனது முன்னுரையில், நிலையான பொருளாதார மீட்சிக்கு வருவாயை அதிகரிக்கும் அதே நேரத்தில் வட்டி செலவுகளைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.  வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்டுள்ள  2024 ஆம் ஆண்டிற்கான வட்டிச் செலவு தற்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்புத் திட்டத்தில் கணிக்கப்பட்டதை  விட 234 பில்லியன் ரூபா அதிகமாகவே உள்ளது என்று  அவர் குறிப்பிட்டார்.  அரசாங்க வருவாயில் வட்டி செலவினங்களின் உலகளவில் அதிகூடிய விகிதத்தை இலங்கை பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தற்போது அது 70% அதிகமாக உள்ள நிலையில், 2024 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 60% க்கும் அதிகமாக இருக்கும் என்றே அவர் சுட்டிக்காட்டினார். 

இக் கருத்தரங்கு வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்தது:  

⦁ (i)  பிடித்துவைத்தல் வரி விகிதங்களை தற்போதுள்ள 5% இலிருந்து 10% ஆக உயர்த்துதல். – இம் முன்மொழிவினூடாக மேலதிமாக 90 பில்லியன்  ரூபாவை ஈட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

⦁ (ii)  சிகரெட் வரிகளை அட்டவணைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட பகுத்தறிவு சூத்திரத்தை ஏற்றுக்கொள்ளல்  – இம் முன்மொழிவு 35 பில்லியனுக்கும் அதிகமான தொகையைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  .  

⦁ (iii) சர்க்கரை வரி குறைப்பை ரத்து செய்து, வரி மாற்றங்களைச் செய்வதில் நிர்வாக அதிகாரத்தை நீக்குதல்- சிறப்பு பண்டங்களுக்கான  வரிச் சட்டத்தின் மூலம் அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட நிர்வாக அதிகாரத்தின் அளவு, பொதுவாக ‘சர்க்கரை ஊழல்’ என்று அழைக்கப்படுவதற்கு வழிவகுத்தது, உடனடியாக அதை சரிசெய்தால் (இப்போது நடந்தது போல) 25 பில்லியனுக்கும் அதிகமான தொகையை ஈட்ட முடியும்.  

⦁ (iv)  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் சர்வதேச ரீதியாக சுட்டெண்ணப்பட்ட சூத்திரத்திற்கு மேலாக அதிகரித்த விலையை அமுல்படுத்துவதற்குப் பதிலாக, முழு தொழிற்துறையின் மீதும் அதிகரிக்கப்பட்ட வரியின் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஏற்படும் அதிகப்படியான செலவினங்களை மீளப்பெறுதல். – இந்த முன்மொழிவு போட்டி தயாரிப்புகளிலிருந்து வசூலிக்கப்படும் மேலதிக வரிகளில் சுமார் 25 பில்லியன் ரூபாயை ஈட்டிக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(v) சொத்து வரிகளை மதிப்பிடுவதற்கும் வசூலிப்பதற்கும் விவரிக்கப்பட்ட முறையை அமுல்படுத்துதல்  – இந்த முன்மொழிவு  ஆரம்பத்தில்  வரி வசூலை குறைந்தபட்சம் 17 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும்.

கருத்தரங்கின் அடுத்த பகுதி பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஐந்து முன்மொழிவுகளை முன்வைத்தது:

⦁ அரசு நிதியுதவியுடன் மகப்பேறு விடுப்பு சலுகைகளை (எம்.எல்.பி)அறிமுகப்படுத்துதல் – தற்போது மகப்பேறு சலுகைகளின் முழு செலவையும் தனியார் துறை ஏற்கிறது, இதனால் பெண்களை வேலைக்கு அமர்த்துவது விலை உயர்ந்தது விடயமாகவே உள்ளது. அரசு நிதியுதவியுடன் கூடிய மகப்பேறு விடுப்பு வசதியூடாக ஆட்சேர்ப்பில் உள்ள பாகுபாட்டைக் குறைத்து மற்றும் பெண் தொழிலாளர் பங்கேற்பை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகிறது.

⦁ பணப்பரிமாற்றம் மற்றும் அரச மானியங்களை சீர்திருத்தம் செய்வதன் மூலம் ஏழைகளைப் பாதுகாத்தல் – சிறந்த இலக்குடன் கூடிய  பணப்பரிமாற்றங்கள் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காத்து, மானியங்களின் ஒதுக்கீட்டை மிகவும் திறமையாகவும், பயனுள்ளதாகவும் ஆக்குகின்றது.

⦁ இலங்கை தனது வர்த்தக நடவடிக்கைகளில் 69% வெளி உதவியை நாடியுள்ளது, இது குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்பட்ட சராசரியான 40% உடன் ஒப்பிடும் போது கணிசமான உயர் வீதமாகும். முன்முயற்சியுடன் செயல்படுத்துவதை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

⦁ வர்த்தகமுத்திரை பதிவு குறித்த மாட்ரிட் நெறிமுறையை ஏற்றுக்கொள்வது – இது சர்வதேச வர்த்தக முத்திரைகள் பதிவின் வேகத்தையும் எளிமையையும் அதிகரிக்கும் என்பதால், ஏற்றுமதியாளர்களுக்கு அதிக பெறுமதி மற்றும் உயர் விளிம்புடைய  தயாரிப்புகளுடன் உலகளவில் செல்வதற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை வழங்குகிறது.

⦁ வங்கித் துறையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் – வங்கித் துறை அபாயங்களை நிவர்த்தி செய்ய வைப்பு உத்தரவாத வரம்பை உயர்த்துதல், வங்கி தோல்விகளின் போது பணப்புழக்கத்திற்கான நிதி ஸ்திரத்தன்மை நிதியத்தை நிறுவுதல் மற்றும் செயல்படாத கடன்களுக்கான சொத்து முகாமைத்துவ நிறுவனத்தை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த மத்திய வங்கி, அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.  

வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து நிஷான் டி மெல், சுபாஷினி அபேசிங்க, பேராசிரியர் மிக் மூரே மற்றும் பேராசிரியர் சாந்த தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்ட குழு கலந்துரையாடல் இடம்பெற்றது. வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரின் மூலோபாய ஆலோசகர் இனோஷினி பெரேரா இந்த அமர்வை வழிநடத்தினார்.

அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரத்தில் விருப்புரிமை அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது உட்பட சிறந்த ஆளுகையின் அவசியத்தை வலியுறுத்தி, கடன் வாங்குவதற்கான செலவைக் குறைப்பதற்கு இலங்கையின் இடர் கண்ணோட்டத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்  இந்த கலந்துரையாடல் எடுத்துக்காட்டியது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு பொது செலவினங்களின் கலவையை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த குழு ஆலோசித்தது.

பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வது தொடர்பான குழு கலந்துரையாடலைத் தொடர்ந்து நிஷான் டி மெல், சுபாஷினி அபேசிங்க, பேராசிரியர் சாந்த தேவராஜன், பேராசிரியர் உதார பீரிஸ் மற்றும் எர்ன்ஸ்ட் மற்றும் யங் நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமைத்துவ பங்குதாரர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஹேமாஸ் கன்ஸ்யூமர் பிராண்ட்ஸ் – நிர்வாக பணிப்பாளர் சப்ரினா யூசுப் அலி தொகுத்து வழங்கினார்.

இலங்கை தனது ஏற்றுமதித் துறைகளை பன்முகப்படுத்தவும், சர்வதேச வர்த்தகத்திற்கான தடைகளைக் குறைக்கவும், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், துறைமுகங்கள் மற்றும் கப்பல் உள்கட்டமைப்பில் பொருளாதார வாய்ப்புகளை கைப்பற்றவும் வேண்டியதன் அவசியத்தை இக்குழு வலியுறுத்தியது. வரி வசூல் மற்றும் நிறுவன செயல்முறைகளில் உள்ள திறமையின்மைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் இந்த கலந்துரையாடல் எடுத்துக்காட்டியது. 

கருத்தரங்கை  நிறைவு செய்த நிஷான் டி மெல்அவர்கள், இம் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டு ஈடுபாடு மற்றும் உடனடி கவனம் தேவை  என்று வலியுறுத்தினார், மேலும் இதனூடாக இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பின் இரண்டாம் பகுதி  கடனை பெறுவதை தடுத்து தற்போதைய மீட்பு பாதையை பயனுள்ளதாகவும் நிலையானதாகவும் மாற்றலாம் என்று அவர் மேலும் கூறினார்.

Visited 1 times, 1 visit(s) today

Last modified: April 16, 2024

Close