Written by 1:49 pm Verité in the News Views: 1


Feature on Manthri.lk

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டு விபரக்கோவை ஒன்றை கொழும்பில் உள்ள வெரிட்டே என்ற ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

உறுப்பினர்களின் நாடாளுமன்ற செயற்பாடுகள், மொத்த தரவரிசை அடிப்படையிலும் கட்சி அடிப்படையிலும் மதிப்பிடப்பட்டுள்ளன.

அதேவேளை 15 தலைப்புக்களின் கீழ் நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை பேசப்படும் போது எந்தெந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பங்களிப்பபை வழங்கினர் என்பது தொடர்பிலும் வெரிட்டே ஆய்வு மையம் விரிவாக தரப்படுத்தியுள்ளது.

குறித்த தரப்படுத்தலின்படி தமிழ் அரசியல் தலைவர்கள் என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தமது சரியான ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் மலையகத் தமிழ் தலைவர்களின் செயற்பாடுகள் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆகவே இந்த ஆய்வு மையத்தின் மதிப்பீட்டு தரவுகளின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தமக்குரிய செயற்பாடுகளை ஞாபகத்தில் கொண்டுள்ளனரா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் பல்வேறு குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும் என்பதை இந்த ஆய்வு மையத்தின் மதிப்பீட்டு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

வெரிட்டே ஆய்வு மையத்தின் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஜே.பி.வி. நாடாளுமன்ற குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மொத்த தரவரிசையிலும் கட்சிகளுக்குரிய தரவரிசையிலும் முதலாம் இடத்தில் உள்ளார்.

இந்த ஆய்வு மையத்தின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பின்வருமாறு.

டக்ளஸ் தேவானந்தா – மொத்த தரவரிசை – 08, கட்சி தரவரிசை – 01

எஸ்.சிறிதரன் – மொத்த தரவரிசை – 12, கட்சி தரவரிசை – 01

ஞானமுத்து சிறிநேசன் – மொத்த தரவரிசை – 16, கட்சி தரவரிசை – 02

ரவூப் ஹக்கீம் – மொத்த தரவரிசை – 31, கட்சி தரவரிசை – 01

சார்ள்ஸ் நிர்மலநாதன் – மொத்த தரவரிசை – 32, கட்சி தரவரிசை – 03

முஜிபுர் ரஹ்மான் – மொத்த தரவரிசை – 33, கட்சி தரவரிசை – 13

இரா.சம்பந்தன் – மொத்த தரவரிசை – 37, கட்சி தரவரிசை – 04

எம்.ஏ.சுமந்திரன் – மொத்த தரவரிசை – 39, கட்சி தரவரிசை – 05

மயில்வானம் திலகராஜா – மொத்த தரவரிசை – 41, கட்சி தரவரிசை – 01

றிஷாட் பதியுதீன் – மொத்த தரவரிசை – 42, கட்சி தரவரிசை – 01

சீனித்தம்பி யோகேஸ்வரன் – மொத்த தரவரிசை – 46, கட்சி தரவரிசை – 06

சாந்தி ஸ்ரீகந்தராசா – மொத்த தரவரிசை – 65, கட்சி தரவரிசை – 07

ஈ.சரவணபவன் – மொத்த தரவரிசை – 66, கட்சி தரவரிசை – 08

டி.எம்.சுவாமிநாதன் – மொத்த தரவரிசை – 67, கட்சி தரவரிசை – 26

சிவசக்தி ஆனந்தன் – மொத்த தரவரிசை – 73, கட்சி தரவரிசை – 01

அலி ஸாஹிர் மௌலானா ஸெய்யிட் – மொத்த தரவரிசை – 83, கட்சி தரவரிசை – 02

க.துரைரட்ணசிங்கம் – மொத்த தரவரிசை – 93, கட்சி தரவரிசை – 09

வேலு குமார் – மொத்த தரவரிசை – 99, கட்சி தரவரிசை – 01

மாவை சேனாதிராஜா – மொத்த தரவரிசை – 112, கட்சி தரவரிசை – 10

வே.இராதாகிருஸ்ணன் – மொத்த தரவரிசை – 115, கட்சி தரவரிசை – 02

கவீந்திரன் கோடீஸ்வரன் – மொத்த தரவரிசை – 118, கட்சி தரவரிசை – 01

வடிவேல் சுரேஸ் – மொத்த தரவரிசை – 119, கட்சி தரவரிசை – 49

எஸ்.சிவமோகன் – மொத்த தரவரிசை – 134, கட்சி தரவரிசை – 11

செல்வம் அடைக்கலநாதன் – மொத்த தரவரிசை – 161, கட்சி தரவரிசை – 02

மனோ கணேசன் – மொத்த தரவரிசை – 171, கட்சி தரவரிசை – 02

பழனி திகாம்பரம் – மொத்த தரவரிசை – 184, கட்சி தரவரிசை – 02

அங்கஜன் இராமநாதன் – மொத்த தரவரிசை – 188, கட்சி தரவரிசை – 63

முத்து சிவலிங்கம் – மொத்த தரவரிசை – 191, கட்சி தரவரிசை – 01

தர்மலிங்கம் சித்தர்த்தன் – மொத்த தரவரிசை – 201, கட்சி தரவரிசை – 02

ஆறுமுகன் தொண்டமான் – மொத்த தரவரிசை – 220, கட்சி தரவரிசை – 02

Taken from IBCTamil

Visited 1 times, 1 visit(s) today

Last modified: November 26, 2023

Close